அமெரிக்கா விதிக்கும் வரிகள்!! சிங்கப்பூரை பாதிக்குமா?
வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் மீது அமெரிக்கா வரிகள் விதிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றாலும் மற்ற நாடுகள் மீது அவை விதிக்கும் வரிகள் அனைத்தும் சிங்கப்பூரையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்.
கனடா மெக்ஸிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பிப்ரவரி ஒன்றாம் தேதி சனிக்கிழமை அன்று புதிய வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
தற்போது 30 நாட்களுக்கு கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதான வரிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.