இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..??

இரத்த நன்கொடையாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு உயர்த்தப்படுமா..??

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இரத்த தானம் செய்வதற்கான வயது வரம்பானது 60 வயதாக இருந்தது.

இந்த வயது வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை சுகாதார அறிவியல் ஆணையம் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறினார்.

இரத்ததானம் செய்பவர்கள் குறைந்தது 16 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 45 கிலோ எடை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்தது 13.0 g/dl ஆகவும், பெண்களுக்கு 12.5 g/dl ஆகவும் இருக்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர்கள் வயதானவராக இருந்தால் அவர்களுக்கு வயது தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.

மேலும் அவர்களுக்கு இதயக் கோளாறுகள், தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வயது வரம்பை உயர்த்தும் போது, ​​இரத்த தானம் செய்பவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இரத்த தானம் செய்பவர்களுக்கான வயது வரம்பை 65 ஆக உயர்த்துவதற்கான சாத்தியம் குறித்து நாடாளுமன்றத்தில் சியே யாவ் சுவென் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஓங் பதிலளித்தார்.

அடுத்த ஆய்வில் உறுப்பினரின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==