கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ…!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!!

கலிபோர்னியாவில் பரவும் காட்டுத் தீ...!!கமலா ஹாரிஸின் வெளிநாட்டு பயணம் ரத்து..!!!

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இது குறித்த தகவலை வெள்ளை மாளிகை நேற்று (ஜனவரி 9) வெளியிட்டது.

அதிகாரத்துவ பயணமாக திருவாட்டி ஹாரிஸ் சிங்கப்பூர், பஹ்ரைன், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதால் அவரது வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற பிறகு அதுவே அவரது கடைசி பயணமாக இருக்கும்.

அதிபர் ஜோ பைடனும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அவர் போப் பிரான்சிஸ், இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரலாறு காணாத அளவிற்குக் காட்டுத் தீ பரவி வருகிறது.

இந்தச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 180,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.