முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்பதை பார்க்கலாம்:
முல்தானி மட்டி சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ஒருவித மண் வகை.
முல்தானிமட்டியில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் அது பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு உகந்த முல்தானி மட்டியை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்தினால் எந்த மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும். அதனை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முல்தானி மட்டியில் சருமத்திற்கு தேவையான தாதுக்கள் மற்றும் சிலிகெட் அதிக அளவில் நிறைந்துள்ளன.
முல்தானி மட்டியை சருமத்தில் பயன்படுத்தும் போது சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்ச பயன்படுத்த
படுகிறது.
முல்தானி மட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் ஒரு களிமண் வகை.
முகப்பரு,தழும்புகள், எண்ணெய் சருமம் மற்றும் மந்தமான சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டி பயன்படுத்தலாம்.
காயங்கள் மற்றும் பருக்கள் உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாமா?
சருமத்தில் காயம், பருக்கள் மற்றும் பருக்களால் உண்டான காயங்கள் இருந்தால் அவர்கள் முல்தானி மட்டியை பயன்படுத்தக் கூடாது.
முகப்பருக்கள் உடையாமல் இருந்தால் மட்டும் முல்தானி மட்டியை அதன் மேல் பயன்படுத்த வேண்டும்.உடைந்த பருக்களின் மேல் முல்தானி மட்டி பயன்படுத்தக் கூடாது.
ஏனென்றால் உடைந்த பருக்களின் மீது முல்தானி மட்டியை பயன்படுத்தும் போது அவை காயத்தில் உள்ள ரத்தத்துடன் கலந்து சருமத்திற்குள் சென்று மோசமான சரும பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் பயன்படுத்தலாமா?
உங்களுடைய சருமம் மிகவும் சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால் நீங்கள் முல்தானி மட்டி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
முல்தானிமட்டி சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் தடிப்புகள் காயங்கள் மற்றும் சருமத்தை மந்தமாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தலாமா?
வறண்ட சருமம் உள்ளவர்கள் முல்தானி மட்டி பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது தான் நல்லது.
முல்தானி மட்டி சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது.அதனால் அதை வறண்ட சருமத்தில் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள நீர்ச்சத்து முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடும்.
சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் முல்தானி மட்டியை சருமத்திற்கு பயன்படுத்தினால் இந்த நிலைகளை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.அதனால் அதை சருமத்திற்கு
போடாமல் தவிர்ப்பது நல்லது.
முல்தானி மட்டியைப் பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள அதனைப் பயன்படுத்துவதற்கு முன் கை அல்லது கழுத்து பகுதியில் பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது.ஏனென்றால் சிலருக்கு முல்தானி மட்டியை பயன்படுத்தினால் எரிச்சல், சருமம் சிவந்து போவது, அரிப்பது, கண்களில் வீக்கம் அல்லது கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் முல்தானி மட்டியால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==