Earn & Save போனஸ்……. எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

Earn & Save போனஸ்....... எப்போது சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்?

சிங்கப்பூரர்களின் ஓய்வுக்கால சேமிக்க ஊக்குவிப்பதற்காக Earn & Save Bonus திட்டத்தின் முதல் தவணைத் தொகை இந்த மாதம் வழங்கப்படும் .

அதன் மூலம் 570,000-க்கும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் பயனடைவார்கள்.

1973 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன் பிறந்த சிங்கப்பூரர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டு 9 பில்லியன் வெள்ளி மதிப்புடைய Majulah என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.

தகுதி பெறும் சிங்கப்பூரர்களின் மத்திய சேம நிதி கணக்கில் 400 வெள்ளியில் இருந்து ஆயிரம் வெள்ளி வரை போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

Earn and Save போனஸ் தொகையைப் பெற தகுதி விதிமுறைகள்:

வேலை செய்ய வேண்டும் முந்தைய மதிப்பீட்டு ஆண்டில் சராசரியாக மாத வருமானம் 500 வெள்ளி முதல் 6000 வெள்ளி வரை இருக்க வேண்டும்.

ஆண்டு மதிப்பின்படி 31,000 வெள்ளிக்கு மேல் இல்லாத வீட்டில் குடியிருக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சொத்து இருக்கக் கூடாது.

இந்த திட்டங்களுக்கு யார் தகுதி பெறுவார்கள் என்பதை govbenefits.gov.sg என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தகுதிப் பெறுபவர்களுக்கு அடுத்த மாதம் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.