இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!!

இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!! கட்டுமான ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை!!

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் கட்டுமான ஊழியர்கள் தண்டிக்கப்பட்ட விதம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் வேலையின் போது பாதுகாப்பு கருவிகளை அணிய மறந்ததால் பாதுகாப்பு வாருடன் தொங்கவிடப்பட்டதாக south China morning post ஊடகம் தெரிவித்தது.

இணையத்தில் பகிரப்பட்ட அந்த காணொளியை 7.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

பணியாளர்களை இவ்வாறு தொங்கவிடுவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று சிலர் கூறினர்.

சிலர் பணியாளர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம் என்று கூறினர்.

பாதுகாப்பு வார் அணியாத போது ஏற்படக்கூடிய விபத்துக்களுடன் ஒப்பிடும்போது இந்த தண்டனை ஒன்றும் பெரிது அல்ல என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களை அவ்வாறு நடத்துவது சட்ட விரோதமான செயல் என்று வழக்கறிஞர்கள் south China morning post யிடம் கூறினர்.