அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!!

அமெரிக்க அதிபர் விதித்த வரி விதிப்பு!! ஜப்பானில் சரிந்த கார் நிறுவனங்களின் பங்குகள்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த வாரத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

வரி விதிப்பை அடுத்து ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கார் நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

மார்ச் மாதம் 27ஆம் தேதி (இன்று) டோக்கியோ பங்குச் சந்தை தொடங்கியதும் உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான Toyota நிறுவனத்தின் பங்குகள் 3.7 சதவீதம் சரிந்தன.

Nissan நிறுவனத்தின் பங்குகள் 3.2% வரை சரிந்தது.

Honda நிறுவனத்தின் பங்குகள் 3.1 சதவீதம் விழுக்காடு வரை சரிந்தன.

Mitsubishi motors நிறுவனத்தின் பங்குகள் 3.7 சதவீதம் குறைந்தன.

அதேபோல தென்கொரியாவின் Hyundai நிறுவனத்தின் பங்குகள் 3.4 சதவீதம் சரிந்தன.

ஜப்பானின் வாகனத் தொழில்துறை அந்நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சுமார் பத்து சதவீத வேலைகள் அந்த துறையைச் சார்ந்ததாகும்.

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு ஜப்பானின் ஏற்றுமதி 21.3 ட்ரில்லியன் யென் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு வாகனங்கள் ஆகும்.