அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ…!!! 5 பேர் உயிரிழப்பு..!!!

அமெரிக்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ...!!! 5 பேர் உயிரிழப்பு..!!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீ, வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.

100 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றினால் தூண்டப்பட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரவியது.

ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் புதன்கிழமை (ஜனவரி 8, 2025) பசிபிக் கடலோரப் பகுதியிலிருந்து பசடேனா வரை பரவிய தீயை அணைக்கப் போராடினர்.

இந்த தீ விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமானது.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பல இடங்களில் தீப்பற்றி எரிவதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சுமார் 37,000 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

தீயை அணைக்க தண்ணீர் தட்டுப்பாடு நீடிப்பதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.