நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!!

நாயுடன் சவாரி செய்யும் Uber டிரைவர்..!!!

அமெரிக்காவில் Uber டிரைவர் ஒருவர் வேலைக்குச் செல்லும் போது தனது செல்லப்பிராணியான நாயை உடன் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொலராடோ மாகாணத்தில் Uber டிரைவர் கெவின் ஃபர்மன் என்பவர் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையில் Bowie என்ற நாயை அமர வைத்து அழைத்துச் செல்கிறார்.

காரில் ஏறும் பல பயணிகள் காரில் நாய் அமர்ந்திருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

சிலர் நாயுடன் தங்களது பயண நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிடுகின்றனர்.

சிலர் நாயை செல்லமாகக் கொஞ்சி விளையாடுகின்றனர்.

அவர்கள் இப்படி தனது நாயுடன் விளையாடும் காட்சிகளை கெவின் சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்.

பிரபலமான Bowieக்கு இணையத்தில் ‘உபர் நாய்’ என்று செல்லப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நெட்டிசன்கள் பலர் கெவின் காரில் ஏறுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ஏங்குகின்றனர்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==