வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!!

வெளிநாட்டு உதவிகளுக்கு தடை விதித்த டிரம்ப்..!!

அமெரிக்கா தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு உதவித் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் தடை செய்துள்ளது.

அவற்றை பரிசீலனை செய்வதற்காக அதிபர் டோனல்ட் டிரம்ப் தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதற்கு 85 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்பின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப உதவித் திட்டங்கள் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

அமெரிக்கா உலகிலேயே அதிக உதவிகளை வழங்கும் நாடாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா 2023 நிதியாண்டில், அது $72 பில்லியன் உதவியை வழங்கியது.

இந்த நடவடிக்கை பில்லியன் கணக்கான டாலர்கள் உயிர் காக்கும் உதவியை நிறுத்தும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.