நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!

நார்வேயில் வெளிநாட்டு பயணிகள் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியது.

இச்சம்பவத்தில் மொத்தம் 58 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் மூன்று பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

படுகாயமடைந்த நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Northern Lights என்றழைக்கப்படும் ஒளிக்காட்சியைக் காண பிரபலமான இடங்களில் ஒன்று Lofoten.

இந்த சம்பவம் Lofoten தீவுக்கூட்டத்திற்கு அருகில் நேர்ந்தது.

Raftsundet பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து சாலையை விட்டு விலகி ஏரியில் விழுந்தது.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் விபத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளின் முழு விவரங்கள் தெரியாததால் பயணிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அந்த பேருந்தில் எட்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணித்தனர்.
சிங்கப்பூர்,மலேசியா, சீனா, பிரான்ஸ், இந்தியா, நெதர்லாந்து, நார்வே, தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

எப்படி விபத்து நேர்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறினர்.