ரேஷன் கடைகளில் கடந்த இரண்டு மற்றும் மூன்று மாதங்களாகவே பாமாயில் எந்த அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. நடுத்தர குடும்பங்கள் உட்பட பெரும்பாலான குடும்பங்களில் ரேஷன் கடையில் கொடுக்கும் பாமாயில் வைத்து தான் எண்ணெய் பலகாரங்களை சுடுவது வழக்கம்.
சமையல்க்கு கடலை எண்ணெய் உபயோகிக்கும் இல்லத்தரசிகள் வடை, பூரி போன்ற பலகாரங்களை சுடுவதற்கு பாமாயிலினை உபயோகிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் கடையில் பாமாயில் வழங்கப்படவில்லை என்பதால் இல்லத்தரசிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு அரசிடம் கேட்கப்பட்ட பொழுது, வித்தியாசமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் விநியோகிக்க திட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமாயிலை விட தேங்காய் எண்ணெய் மட்டும் கடலை எண்ணெய் ஆகியவை நல்லது என்பதால் அதை விநியோகம் செய்ய மக்களிடம் கருத்துக்கணிப்புகள் கேட்கப்பட்டு வருகின்றன. மேலும், கடலை மற்றும் தேங்காய் மானிய விலையில் எடுக்கப்படும் பொழுது விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.