கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!!

கதறும் மூதாட்டி..!! மகன் என நம்பவைத்து ஏமாற்றியச் செயல்..!!

சீனாவில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் 76,000 டாலரை (S$103,703) பறி கொடுத்துள்ளார்.

ஒரு சீன இணையப் பிரபலம் அவரை “அம்மா அம்மா” என்று அன்புடன் அழைத்ததால் அவரை நம்பி திருவாட்டி டாங் பணத்தை இழந்துள்ளார்.

மூதாட்டி 70 வயது மதிக்கத்தக்கவர் என்று கூறப்படுகிறது.

மூதாட்டி திருமணமாகாதவர்.அவருக்கென்று குடும்பம் இல்லை.

2022ல், தெரியாத நபர்களுக்கு திருவாட்டி டாங் அடிக்கடி பணம் அனுப்புவதை அவரது உறவினர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

அந்த இணையப் பிரபலம் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக திருவாட்டி டாங் நம்பினார்.

முதலில், திருவாட்டி டாங் காணொளி மூலம் சிறிய பரிசுகளை அனுப்பினார்.

பின்னர் மோசடி நபர் திருவாட்டி டாங்கை அவரது தனிப்பட்ட தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

ஒவ்வொரு நாளும் அவர் ஒரு உண்மையான மகனைப் போல இனிமையாகப் பேசினார்.

அந்த மோசடி நபர் திருவாட்டி டாங்கின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு,சிறிது சிறிதாக பணம் பறிக்கத் தொடங்கினார்.

மகனுக்கு உதவுவதாக நினைத்து திருவாட்டி டாங்கும் பணம் கொடுக்க ஆரம்பித்தார்.

ஆனால் இறுதியில் சந்தேக நபர் திருவாட்டி டாங்குடனான தொடர்பைக் குறைத்துக்கொண்டார்.

இதனால் சந்தேகமடைந்த திருவாட்டி டாங்,
2023 இல் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி சந்தேக நபரை கைது செய்தனர்.

அவருக்கு 10.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 14,000 டாலர் (S$19,110) அபராதமும் விதிக்கப்பட்டது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==