நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்…!!!

நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கூடுதல் கால பயிற்சி மற்றும் இரண்டு படிப்புகளில் ஒரே நேரத்தில் பட்டம் பெறுதல் போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது.

நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் முதல் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக மாணவர்கள் ஒரு படிப்பில் மட்டுமே பட்டம் பெறுவார்கள்.

ஆனால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டபுள் மேஜர் எனப்படும் பாடத்திட்டத்தின் மூலம் இரண்டு பாடங்களில் ஒரே நேரத்தில் அவர்களால் பட்டம் பெற முடியும்.

மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

பல்வேறு பாடங்களில் மாணவர்களின் திறன்களை வளர்க்க நீ ஆன் பாலிடெக்னிக் கல்லூரி மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Temasek பாலிடெக்னிக் அதன் மாணவர்களின் கூடுதல் கல்வித் திறன்களை வளர்க்க உதவுகிறது.

பட்டயப் படிப்பை தவிர, இன்டர்ன்ஷிப் பயிற்சி மற்றும் பிற செயல்பாடுகளின் மூலம் மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==