இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!!

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்...!!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதான பாண்டுரங் உல்பே என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தினர்.

ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் உறவினர்கள் பலர் வீட்டில் திரண்டனர்.

அவர்கள் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.

உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

வாகனம் வரும் வழியில் ஒரு மேடு இருந்ததாகவும் அதன் மீது வாகனம் ஏறிய போது அவர் திடீரென கண்விழித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

உல்பேயின் கைவிரல்களும் அசைய தொடங்கியதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

இதனால் தனது இறுதிச் சடங்கிற்கு செல்லவிருந்த உல்பே மீண்டும் மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, உல்பே உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.