இன்று வெளியாகும் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவு!! 8.2 மில்லியன் வெள்ளி யாருக்கு கிடைக்க போகிறது!!
சிங்கப்பூர் : சமீபத்தில் புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுத்தொகை 8.2 மில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டு தங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொட்டி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பலர் தங்களுக்கு ராசியான கடை என கருதப்படும் கடைகளுக்கு சென்று அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டை வாங்கியுள்ளனர்.இதனை 8 World செய்தித்தளம் வெளியிட்டது.
அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை வாங்குவதற்காக மக்கள் அதிகாலையிலிருந்து வரிசையில் காத்திருந்ததாக 8 World செய்தித்தளத்திடம் சென் என்பவர் கூறினார்.