லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!!

லவ் டுடே படத்தின் கதாநாயகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளாராம்!!

லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றவர் பிரதீப் ரங்கநாதன்.

அந்த படத்திற்குப் பின்னர் இவர் இயக்குவதை விட நடிப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK
மற்றும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் போன்ற படங்களுக்கு அவர் கமிட் ஆகியுள்ளார்.

இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூபாய் 18 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

டிராகன் படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிறது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,கௌதம் மேனன்,மிஸ்கின், வி ஜே சித்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் பிளாக்பஸ்டர் என்றும் Perfect Entertainer என்றும் முதல் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ஹீரோ பிரதீப் ரங்கநாதனை பாராட்டி இந்த விமர்சனம் பதிவிடப்பட்டுள்ளது.இதன் மூலம் இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

FOLLOW US ON : 

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==