வசூல் வேட்டையில் நனையும் டிராகன்…..உலகளவில் இவ்வளவு கோடியா?

வசூல் வேட்டையில் நனையும் டிராகன்.....உலகளவில் இவ்வளவு கோடியா?

இந்த வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து வசூல் வேட்டை ஈட்டி வரும் திரைப்படம் டிராகன்.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் டிராகன் இந்தப் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன்,கையாடு லோகர்,மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

டிராகன் திரைப்படம் உலக அளவில் 10 நாட்களில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனை படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து சமீபத்தில் கொண்டாடினார்கள்.

18 நாட்கள் பாக்ஸ் ஆபீஸில் இருக்கும் டிராகன் படம் இதுவரை உலக அளவில் இந்தப் படம் 18 நாட்களில் ரூபாய் 140 கோடி வசூல் செய்துள்ளது.