கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி…!!!

கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை போக்க சிறந்த வழி...!!!

அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது… இப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக முகத்தை மட்டும் கவனிக்கும் நாம் கழுத்துப் பகுதியை கவனிப்பதில்லை.. இதனால் சிலருக்கு முகம் மட்டும் பளிச்சென்று தெரியும். ஆனால் கழுத்துப்பகுதி கருமை நிறமாக காட்சியளிக்கும். இது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும். இந்த பிரச்சனை ஆனது ஆண்,பெண் என இருவருக்கும் இருக்கும்.

முகத்தை மட்டும் பளபளப்பாக வைத்துக் கொள்ள நினைக்கும் நாம் ஏன் கழுத்து பகுதியை சரிவர
பராமரிப்பதில்லை.. சில இயற்கையான பேக்குகள் கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை நீக்கி பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது. இப்படி கருந்திட்டை நீக்கி கழுத்தை வெள்ளை நிறமாக மாற்றும் சில இயற்கையான தீர்வுகளைப் பற்றி இங்கு காண்போம்.

இதோ உங்களுக்கான டிப்ஸ்..

 

💫 புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நிறம் மாறுவது கண்கூடாக தெரியும்.

💫 புளித்த தயிருடன் சிறிதளவு தேன் கலந்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

💫 தக்காளியை இரண்டாக நறுக்கி அதை மஞ்சளில் தேய்த்து கழுத்தில் மசாஜ் செய்தால் இறந்த செல்கள் நீங்கும்.

💫 காபி பவுடர் ஒரு டீஸ்பூன்,சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து கழுத்தில் 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் பளிச்சென்று தெரியும்.

💫 கடலை மாவு மற்றும் 2 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் தடவினால் கருமை நீங்கும்.

💫 இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெயை கழுத்தில் தடவி மறுநாள் காலை சுடுநீரில் கழுவினால் நிறம் மாறும்.

💫 ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்துப் பகுதி சுற்றிலும் தேய்த்து வர கருமை நீங்கும்.

💫 கற்றாழையின் சதைப்பகுதியை தக்காளிச் சாறுடன் கலந்து தேய்த்து வர நிறம் மாறும்.

💫 உருளைக்கிழங்கின் சாறும் கருமை நிறத்தை போக்க வல்லது.

💫 ஆரஞ்சு பழத்தின் தோல்களில்
ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால் இது கருமையை போக்கும்.

💫 ஓட்ஸை அரைத்து அதனுடன் தக்காளிச் சாறு கலந்து கழுத்தில் தடவி வர கருமை நீங்க பொலிவு பெறும்.