அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய தண்டேல்!!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய தண்டேல்!!

பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அஜித் நடிப்பில் திரைக்கு வந்த படம் விடாமுயற்சி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.இப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்தது.

ஆனால் படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இரண்டாவது நாளில் இந்த படத்தின் வசூல் 10 கோடி .

இப்படத்திற்கு விமர்சனம் ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் விடாமுயற்சி படம் திரைக்கு வந்த மறுநாள் பிப்ரவரி 7ஆம் தேதி அன்று நாக சைதன்யா,சாய் பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த தண்டேல் படம் முதல் நாளில் உலக அளவில் 21. 27 கோடி வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் இரண்டாவது நாளில் இந்த படம் இந்திய அளவில் 12. 65 கோடி வசூலித்துள்ளது.

உலக அளவில் இரண்டு நாளில் தண்டில் படம் 41.20 கோடி வசூலித்துள்ளது.