Tata Docomo: இந்தியா முழுவதும் பொதுமக்கள் உபயோகப்படுத்தும் பெரும்பாலான செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் பிளானை அதிக படுத்தியது பொதுமக்கள் அனைவரிடமும் ஒட்டுமொத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இதைப் பற்றியே சமூக வலைதளங்களில் பேசி வந்தனர்.
வேறு சிலர் மத்திய அரசின் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் பிளான்களுடன், விலை அதிகரித்த நெட்வொர்க் பிளான்களை ஒப்பிட்டு பேசு பொருள் ஆக்கினர். மேலும், அதிகப்படியான மக்கள் ஒரே வாரத்தில் பிஎஸ்என்எல் நெட்வொர்க்களுக்கு மாறினர்.
தற்பொழுது தங்களது பக்கம் வந்த மக்களை மகிழ்ச்சி படுத்தவும், மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் பிஎஸ்என்எல் நூறு ரூபாய்க்கு 35 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய பிளானினை அறிவித்துள்ளது.
இதை பொதுமக்கள் அனைவரும் கவனித்து வரும் வேளையில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் டாடா குழுமம் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. முன்பு ஒரு காலத்தில் அனைவரும் பயன்படுத்தி வந்த பிரபலமான செல்போன் மற்றும் நெட்வொர்க் டாடா டோகோமோ ஆகும். பின்பு போட்டியாக வந்த பல்வேறு நெட்வொர்க் நிறுவனங்களை சமாளிக்க முடியாமல் இந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.
தற்பொழுது பொது மக்களுக்கு உபயோகமாக இருக்கும் வகையில் பல்வேறு பிளான்கள் உடன் களம்பிறங்க உள்ளதாக டாடா டொகோமோ அறிவித்துள்ளது.