North korea : மன்னர் ஆட்சி காலத்தில் மன்னருக்கு எதிராக ஏதாவது சதி செயல்கள் நடந்தாலும், நாட்டிற்கு எதிராக குற்றங்கள் நடக்கிறது என்று தெரிந்தாலும் எந்த விசாரணையும் இல்லாமல் மரண தண்டனை அளிக்கப்படும் செய்தியை கதைகளில் பார்த்திருப்போம். ஆனால் இன்று அதையெல்லாம் படிக்கும் பொழுது நாம் எப்பேர்ப்பட்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பெருமூச்சு விட தோன்றும்.
ஆனால் இப்பொழுது உலகில் ஏதோ ஒரு மூலையில் எந்த விசாரணையும் இல்லாமல் மரண தண்டனை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா? அதுவும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது என்றால் நெஞ்சம் பதறுகிறதல்லவா?
இது எங்க போய் முடிய போகுதோ… சீனாவின் யோசனைக்கு அளவே இல்லையா? எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
அப்பேர்ப்பட்ட கொடுமை நடக்கும் நாடு எது தெரியுமா? அதுதான் வட கொரியா. வடகொரியாவின் அதிபராக இருந்து வரும் கிம் ஜான் என்ற இவரின் பெயரை கேட்டாலே வடகொரியா மக்கள் அனைவரும் நடுநடுங்குவர். அந்த அளவிற்கு சர்வாதிகார ஆட்சியால் மக்களை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஆவார்.
உலகம் எவ்வளவோ தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் அதை மக்களிடம் சென்று சேராமல், செய்தி ஊடகங்களை கூட தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது இந்த நாடு. இந்த நாட்டின் எதிரி தென்கொரியாவாகும். தென்கொரியா நாட்டின் சீரியல்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.
வடகொரியாவில் இளைஞர்கள் இதை பார்க்க கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கின்றதாம். இந்த சீரியலை பார்த்த குற்றத்திற்காக தான் படகோடிய நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நம் நாட்டில் கற்பழிப்பில் ஈடுபட்டவர்களே தில்லாக சுத்தும் பொழுது, சீரியல் பார்த்த குற்றத்திற்காக மரண தண்டையா? என இச்சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.