சோனி நிறுவனத்தால் மே மாதத்தில் அறிமுகம் காணும் புதிய ஸ்மார்ட் போன்…!!!

சோனி நிறுவனத்தால் மே மாதத்தில் அறிமுகம் காணும் புதிய ஸ்மார்ட் போன்...!!!

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சோனி எக்ஸ்பீரியா 1 VI ஸ்மார்ட்போன் உலக சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சோனி நிறுவனம், சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் மாடலை மே மாதத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அதில் என்னென்ன அம்சங்கள் நிறைந்திருக்கும் என்ற விவரங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.
இது குறித்த தகவல்களை இங்கே காணலாம்.


இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ளன.குறிப்பாக, பின்புற கேமரா பம்பின் தடிமன் 11 mmஆகும்.மேலும் இந்த போன் தடிமனான பெசல்களுடன் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த போனில் இரட்டை முன்பக்க ஸ்பீக்கர்கள், ஹைப்ரிட் சிம் ஸ்லாட் வசதியும் உள்ளன.போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்படும். குறிப்பாக, இந்த போனில் அனைத்து ஆப்களையும் சீராகப் பயன்படுத்தலாம்.இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகத்தையும் செயல்திறனையும் வழங்குகிறது.

சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்படும். இந்த டிஸ்ப்ளே 16:5:9 என்ற விகிதத்தில், 4K தெளிவுத்திறன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்  உள்ளிட்ட பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

குறிப்பாக, சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கும். அவை 12 GB ரேம் + 256 GB மெமரி மற்றும் 16 GB+ 512 GB மெமரி கொண்டவை.இந்த போன் ஆண்ட்ராய்டு 15 OS அடிப்படையிலானது.

இருப்பினும், இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும்.

இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனில் OIS ஆதரவுடன் கூடிய மூன்று பின்புற கேமராக்கள் உள்ளது.48MP மெயின் லென்ஸ் + 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 12MP பெரிஸ்கோப் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இதில் LED ஃப்ளாஷ் மற்றும் ஏஐ வசதியும் உள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு ஏற்ற வகையில் 12MP கேமராவுடன் வருகிறது. குறிப்பாக, இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது. மேலும் இதில் 30W அதிவேக சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே நீங்கள் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்யலாம்.

சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் 1,399 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,19,60 விலையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போன் அனைத்து விதமான சிறப்பு அம்சங்களுடனும் வருவதால் இந்த மொபைல் போன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.