சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!!

சிங்கப்பூர், வியட்நாம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்த நடத்திய கலந்துரையாடல்!!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி,கரிம வெளியேற்றம் மற்றும் மின்னிலக்கப் பொருளாதாரத்தில் மேலும் ஒத்துழைப்பு குறித்து சிங்கப்பூரும், வியட்நாமும் கலந்துரையாடின.

இந்த ஆண்டு இரு நாடுகளும் தங்கள் உறவை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளன.

அதன் வகையில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வியட்நாம் நாட்டிற்கு அறிமுகப் பயணம் மேற்கொள்வார். வியட்நாமின் தலைமைச் செயலாளர் தோ லாம் சிங்கப்பூருக்கு வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில்,சிறந்த பொருளாதார மற்றும் மக்களிடையேயான உறவுகளால் வலுப்படுத்தும் என்று அவர் அதில் பதிவிட்டுள்ளார்.