புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!!

புதிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்கும் சிங்கப்பூர்!!

சிங்கப்பூர் ஆயுதப்படையிடம் ஏற்கனவே நான்கு நீர்மூழ்கி கப்பல்கள் இருக்கிறது.மேலும் அது இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவுள்ளதாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமது அமைச்சகத்திற்கான செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தில் அவர் பேசினார்.

சுதந்திரமான அரசுரிமையைக் கொண்ட நாடு என்கிற முறையில் சிங்கப்பூர் மக்களின் வருங்காலத்தை பாதுகாப்பதற்கு தேவையானதை செய்வதாக டாக்டர் இங் கூறினார்.

தற்போதைய நிதியாண்டில் தற்காப்பு செலவு சுமார் 23 பில்லியன் வெள்ளியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஆண்டை விட இது 12 சதவீதம் அதிகம்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==