சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!!

சிங்கப்பூர் : கடலோர காவல்படையின் Brani தளத்தில் எண்ணெய் கசிவு!!

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை காலை கடலோர காவல்படையின் Brani தளத்தில் சேதம் அடைந்த எரிபொருள் குழாயில் இருந்து சுமார் 23 டன் எண்ணெய் கசிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எண்ணெய் படலங்கள் எதுவும் கடலில் காணப்படவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை,கடல் துறை, துறைமுக ஆணையம் மற்றும் தேசிய சுற்றுப்புற அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Brani தளத்தில் புதன்கிழமை அன்று காலை 11:40 மணியளவில் டீசல் எண்ணெய் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பிற்பகல் 3:40 மணியளவில் அப்புறப்படுத்தப்பட்டது.

Selat sengkir பகுதியில் சுற்றுக்காவல் கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்ப பயன்படுத்தப்படும் குழாயில் ஏற்பட்ட சேதமடைந்ததால் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

சிங்கப்பூரின் தெற்கே அமைந்துள்ள நீர் பரப்பில் காணப்பட்ட எண்ணெய் படலங்களைச் சுத்தம் செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர். மேலும் குத்தகையாளர்களும் நியமிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது எண்ணெய் படலங்கள் தென்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றும் சிங்கப்பூர் துறைமுக செயல்பாடுகளிலும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.