சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!!

சிங்கப்பூர் : மொபைல் போன் திரையில் கோடு!! அதிகரித்துள்ள புகார்கள்!!

மொபைல் போனின் திரையில் கோடுகள் தோன்றுவது குறித்த புகார்கள் இரட்டிப்பாகியுள்ளதாக சிங்கப்பூர் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு 4 புகார்களும்,2023 ஆம் ஆண்டு 14 புகார்களும் ,2024 நவம்பர் 14 ஆம் தேதி வரை 31 புகார்கள் பதிவாகியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டில் samsung மொபைல் போன்கள் குறித்து 48 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தது.

திரையில் பச்சை,இளஞ்சிவப்பு,வெள்ளை நிறக்கோடுகள் தோன்றியதாக புகார் தந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.

மொபைல் போனின் சாப்ட்வேர் அப்டேட்டுக்கு பிறகு பிரச்சனை ஏற்பட்டதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறம் திரையில் உள்ள இணைப்பு பகுதிகளில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது மொபைல் கீழே விழுந்து சேதம் ஏற்பட்டாலோ கோடு தோன்றும்.

சாம்சங் பயன்படுத்துவோர்கள் மொபைலில் கோளாறு ஏற்பட்டால் அதிகாரப்பூர்வ சேவைகளை நாடுமாறு சாம்சங் கேட்டுக் கொண்டது.