சிங்கப்பூர் : பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்பட வாய்ப்புள்ளதா?
சிங்கப்பூரின் நிதி அமைப்பு நிச்சயமற்ற உலகளாவிய அரசியல் சூழலை தாங்கும் திறன் கொண்டது என்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியுள்ளது.
வர்த்தக பதற்றங்கள்,மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் மோதல்கள் இருந்தபோதிலும் இது சாத்தியம் என்று வாரியம் கூறியது.
ஆனால் பொருள் விநியோகத்தில் திடீர் தடங்கல் ஏற்படக்கூடும்.இத்தகைய சவால்களை நிறுவனங்கள்,குடும்பங்கள் மற்றும் வங்கிகள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
நிறுவனங்கள்,வங்கிகள் மற்றும் குடும்பங்கள் அதிகமான வட்டி விகிதம் மற்றும் சந்தைகள் மாற்றங்களை நன்கு சமாளிக்கின்றன என்பதை வாரியத்தின் சோதனைகள் காட்டுகின்றன.
கடந்த ஆண்டு வட்டி அதிகரித்த போதிலும் கடன்களை சமாளிப்பதற்கு குடும்பங்களிடம் நிதி இருந்தது சோதனையில் தெரியவந்தது.
சம்பள உயர்வு குடும்பங்களுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டது.
நிறுவனங்கள் வட்டி விகித உயர்வு மற்றும் வருமானத்தில் ஏற்படும் திடீர் பாதிப்பு ஆகியவைகளை எதிர்கொள்ள போதுமான நிதி இருப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.