சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்…….

சிங்கப்பூர் : நாளை முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணத்தில்.......

சிங்கப்பூர் : ரயில்,பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 6 சதவீதம் அதிகரிக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் போக்குவரத்து மன்றம் தெரிவித்திருந்தது.

நாளை(டிசம்பர் 28) முதல் ரயில், பேருந்து சேவைகளுக்கான கட்டணம் உயரும்.

பெரியவர்கள் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும்

சலுகைக் கட்டண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள்,முதியவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் கூடுதலாக 4 காசு செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரர்களின் சம்பள உயர்வு மற்றும் அடிப்படைப் பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மன்றம் கூறியது.

இந்த நிலையில் கட்டண உயர்வை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பொதுப் போக்குவரத்து வவுச்சர்கள் வழங்கப்படும் என்று அது தெரிவித்தது.

ஒவ்வொரு வவுச்சரும் 60 வெள்ளி மதிப்புடையது.