சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : அரசாங்க இணையதளம் போன்ற மோசடி இணையதளம்!!

சிங்கப்பூர் : சிங்கப்பூர் அரசாங்க இணையதளம் போன்றே போலி இணையதளம் ஒன்று செயல்பாட்டில் இருப்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது.

அதேபோல் எவ்வித மாற்றமும் இன்றி மோசடி இணையதளம் ஒன்று செயல்பட்டு வந்ததை இணையதள பாதுகாப்பு நிறுவனமான “குரூப்-ஐபி” போலி இணையதளத்தைக் கண்டறிந்தது.

இதுபோன்ற மோசடி இணையதளத்தில் பொதுமக்களின் சுயவிவரம், கடன் அட்டை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.

இந்த போலியான இணையதளம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டிருக்கலாம் எனவும், இந்த மோசடி இணையதளம் இருபதுக்கும் மேற்பட்ட போலி இணையதளங்களுடன் இணைந்து செயல்படுவதாக குரூப்-ஐபி நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது.

இந்த போலி மோசடி இணையதளம் குறித்தும், அது எவ்வாறு செயல்படுகிறது குறித்தும் டிசம்பர் 13-ஆம் தேதி குரூப்-ஐபி வெளியிட்ட அறிக்கையில் தெளிவாக விளக்கமளித்துள்ளது.

இந்த மோசடி இணையதளம் குறித்து ஏதேனும் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என காவல்துறை விசாரித்தது. இது குறித்து புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் காவல்துறை உறுதி செய்தது.

இது குறித்த கேள்விகளுக்கு அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் பேச்சாளர் ஒருவர் டிசம்பர் 23 ஆம் தேதி பதிலளித்துள்ளார்.

இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளை அறிந்திருப்பதாகவும், மோசடி இணையதளம் குறித்த விவாகரத்தை தீவிரமாக எடுத்து கொள்வதாகவும் கூறினார்.