இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

இவ்வாண்டு சிங்கப்பூரில் மூன்றாவது முறையாக தீவிரப் பருவமழை!!

சிங்கப்பூரின் எல்லா இடங்களிலும் நேற்று மழை பொழிந்தது.

நேற்று பிற்பகல் 23.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை குறைந்தது.

இவ்வாண்டு சிங்கப்பூர் மூன்றாவது முறையாக அதிக பருவமழை எதிர்கொள்கிறது.

மார்ச் மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பருவ மழை நீடிக்கும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு மார்ச் மாதம் 17ஆம் தேதி எச்சரித்தது.

அதேபோல சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.

22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையலாம் என்றும் அதேபோல மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தென் சீனக் கடலில் வடகிழக்கு பருவக்காற்று வலுவடையும்போது கூடுதல் பருவ மழை பெய்யும்.

இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான மழை மேகங்கள் உருவாகின்றன என்று சுற்றுப்புற அமைப்பு கூறியது.