சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!!

சிங்கப்பூரில் வேலையில் இருப்பவர்களின் விகிதம் தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவு!!

சிங்கப்பூரில் வேலையில் இருப்போர் விகிதம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது.அதற்கு கரணம் மூப்படையும் மக்கள்தொகை என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

நவம்பர் 28 ஆம் தேதி (இன்று) ஊழியரணி குறித்து முன்னோட்ட அறிக்கையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது.

சிங்கப்பூரில் மக்கள் தொகையில் முதியோர்களின் விகிதம் அதிகமாக உள்ளது.

65 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் வேலையில் இருப்பவர்கள் , வேலை தேடுபவர்களளின் விகிதம் குறைந்து இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் ஊழியரணியில் இருந்தோர்களின் விகிதம் 70.5%.

2022 ஆம் ஆண்டில் ஊழியரணியில் இருந்தோர்களின் விகிதம் 70%.

2023 ஆம் ஆண்டில் ஊழியரணியில் இருந்தோர்களின் விகிதம் 68.6%.

2024 ஆம் ஆண்டில் ஊழியரணியில் இருப்போர்களின் விகிதம் 68.2%.

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் இவ்வாண்டின் ஊழியரணியில் இருப்போர்களின் விகிதம் 0.4 விழுக்காடு குறைந்துள்ளது.