சிங்கப்பூர் : ஊழியர்கள் அடுத்த வருடம் ஊதிய உயர்வை எதிர்பார்க்கலாம்!!
சிங்கப்பூர் ஊழியர்கள் வரும் 2025-ஆம் ஆண்டு சராசரியாக இரண்டு முதல் ஐந்து சதவீத ஊதிய உயர்வை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
அண்மையில் மனிதவள நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொண்டது.அதில் இந்த தகவல் தெரிய வந்தது.
நிறுவனங்கள் அடுத்த ஆண்டுக்கான ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து கவனமாக கையாள்வதாக மனிதவள நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏயோன் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில்,தென்கிழக்காசியாவில் ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக ஒதுக்கப்படும் நிதி கடந்த ஆண்டை விட சற்று உயரும் என்று வெளியிட்டுள்ளது.
திறமையான பணியாளர்கள் தேவை இருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கப்பூர் மட்டும் அல்லாமல் மேலும் ஐந்து தென்கிழக்காசிய நாடுகளிலும் உள்ள 950 க்கும் அதிகமான நிறுவனங்களில் ஏயோன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
அந்த ஆய்வில் 4.4 சதவீத சம்பள உயர்வை சிங்கப்பூர் ஊழியர்கள் பெறுவார்கள் என தெரியவந்துள்ளது.
வியட்னாமிய ஊழியர்கள் 6.7 சதவீத சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூர் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு நான்கு சதவீத சம்பள உயர்வை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெர்சர் நிறுவனம் கூறுகிறது.
ராபர்ட் வால்டர்ஸ் கூறுகையில், அதே நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்கள் பணவீக்கத்தை கருத்தில் எடுத்து கொண்டு இரண்டு முதல் ஐந்து சதவீத சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.