சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!!

சிங்கப்பூர் : ஊழியர்கள் உயரத்திலிருந்து கிழே விழுந்து மரணம் அடையும் சம்பவம் குறைந்துள்ளது!!

சிங்கப்பூரில் ஊழியர்கள் உயரமான இடங்களில் இருந்து கீழே விழுந்து மரணம் அடையும் சம்பவங்கள் குறைந்து இருக்கின்றன.

2024 ஆம் ஆண்டு ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்ததனர்.

10 ஆண்டுகளில் இது குறைவான எண்ணிக்கை என்று வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்தது.

வேலை பார்க்கும் இடங்களில் ஏற்படும் மரணங்களில் கீழே விழுந்து மரணம் அடைவது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

அதுவே இதற்கு முன்னர் இரண்டாவது இடத்தில் இருந்தது.

விபத்துக்களை தடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போன்றவைகள் அதிகரித்தது தான் அதற்கு முக்கிய காரணம் என்று பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை கூறியது.


சிங்கப்பூரில் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை வழி வகுக்கிறது.

சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம் மனித இயந்திரக் கருவிகளை அறிமுகப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது.