சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!!

சிங்கப்பூர் : இணையச் சேவையை சீரமைப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிறுவனம்!!

Doctor Anywhere நிர்வாகம் அதன் இணையச் சேவையை மறுசீரமைப்பதால் அதன் ஊழியர்களை சுமார் 8 சதவீதம் குறைத்துள்ளது.

சிங்கப்பூரைத் தலைமையாக கொண்டு அது இயங்குகிறது.மலேசியா,இந்தோனேசியா உட்பட ஆறு தென்கிழக்காசிய நாடுகளில் பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளது.

Doctor Anywhere சுகாதாரப் பராமரிப்பு சேவையை வழங்குகிறது.அதன் இணையச் சேவையின் 45 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

தற்போதைய பொருளாதார சவால்கள் மற்றும் நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக CNA விடம் அந்நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட வேலைகளில் 20 சதவீதத்திற்கு குறைவான வேலைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக அது கூறியது.

நோயாளிகளுக்கும் அதன் பங்காளிகளுக்கும் சிறந்த சேவை வழங்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளதாக அது தெரிவித்தது.