சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!!

சிங்கப்பூர் : சாலையில் சிவப்பு விளக்கை கடக்கும் வாகனங்களைப் புகைப்படம் எடுக்கும் கருவி!!

சாலையில் சிவப்பு விளக்கை கடந்து செல்லும் வாகனங்களை புகைப்படம் எடுக்க கூடுதலான கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உள்துறை துணை அமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த கருவிகள் வேகமாக வாகனம் ஓட்டும் குற்றங்களைக் குறைக்க உதவியுள்ளதாக என்று அவர் கூறினார்.

விபத்துக்கள் அல்லது வேகக்கட்டுப்பாட்டு மீறல்கள் ஆகியவை அதிகமாக நடைபெறும் இடங்களில் சென்ற வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து அந்த கருவிகள் பொருத்தப்பட்டன.

சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல சாலைகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று நடவடிக்கை எடுப்பது அதிகரிக்கும் என்று ஃபைசல் கூறினார்.