உணவுப் பொருட்கள், பேக்கேஜிங் முறைகள், உணவு பதப்படுத்தும் தொழில் புத்தகங்கள் போன்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சி, சர்வதேச உலகளாவிய உற்பத்தி சந்தையில் இந்தியாவின் இடத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா 15 வகையான விவசாய சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டிருப்பதால்,பல்வேறு பயிர்களை அறுவடை செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
உலகளாவிய உணவுத் துறையின் எதிர்கால உந்து சக்தியாக இந்தியா இருக்கும் என்று இந்திய உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிக்கி ‘தலைவர் நீல் பரேக், ‘இண்டஸ்ஃபுட் 2025’ல் சிங்கப்பூர் மேயர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வு தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு விரிவாக்கம் மற்றும் புதிய வாய்ப்புகளை ஆராய்வதற்கு ஒரு நல்ல தளத்தை உருவாக்கியது என்று’சிக்கி’ அமைப்பு தெரிவித்துள்ளது.
உணவுத் துறையில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
இந்தப் பங்கேற்பின் மூலம் உணவு ஏற்றுமதியில் சிங்கப்பூரின் நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்த முயல்வதாகவும்,ஒரு முக்கிய வர்த்தக பங்காளியாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த முடிந்ததாகவும் திரு.பரேக் கூறினார்.