விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா?

விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி இந்த சாதனத்தை வைக்கக்கூடாதா?

ஜனவரி 28ஆம் தேதி தென் கொரியாவில் இருந்து ஹாங்காங்கிற்கு கிளம்ப இருந்த விமானம் தீப்பிடித்தது.விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்து எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

இருக்கைகளுக்கு மேல் பெட்டி வைக்கும் இடத்தில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருக்கைகளுக்கு மேல் பெட்டிகள் வைக்கும் இடத்தில் பவர் பேங்க் எனும் மின்னூட்டம் செய்யும் சாதனங்களை இனிமேல் வைக்கக்கூடாது.பயணிகள் தங்கள் கைப்பைகளில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏர் புஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு அது கைப்பைகளில் இருக்கும் போது தீ பிடித்தாலும் அதை விரைவாக அணைக்க முடியும் என்று கூறுகிறது. பவர் பேங்க் சாதனங்களால் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக ஏர்புசான் நிறுவனம் கூறியது.

தீப்பிடிக்கும் சாதனங்களை கையாள்வது குறித்து விமான பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.