அதிர்ச்சி..!!! குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்...!!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் முடங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகளை நாகரிகமாக வளர்க்கிறோம் என்ற பெயரில் வீட்டிற்குள்ளேயே குழந்தைகளை அடக்கி வைக்கின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தை சமாளிக்க முடியாமல் அவர்களின் பொழுதுபோக்கிற்காக கையில் செல்போனை கொடுத்து விடுகின்றனர்.இப்படி பல மணி நேரம் குழந்தைகள் செல்போனில் மூழ்கி விடுகின்றனர்.. நாம் குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை இன்று குழந்தைகள் விளையாடுவதில்லை. வீட்டில் முடங்கி கிடக்கும் அவர்கள் செல்போனை கதி எனக்கு கிடைக்கின்றனர். இதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதை நாம் அறிவதில்லை…
குழந்தைகளுக்கு ஏன் செல்போன் கொடுக்கக் கூடாது..??
குழந்தைகள் செல்போனை பார்ப்பதால் அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன் ஸ்கிரீனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்கள் குழந்தையின் மூளையை பாதிக்கிறது. குழந்தைகளின் மூளையானது பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிகமாக இந்தக் கதிர்வீச்சுகளை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் குழந்தைகள் செல்போன் உபயோகிக்கும் பொழுது அது வெகுவாக பாதிக்கிறது. அதிக நேரம் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் அவர்களின் பேச்சுத் திறன் மற்றும் நினைவாற்றல் பாதிப்படைகிறது. பள்ளிகளில் கூட பாடங்களை கவனிக்க முடியாமல் கவனிச்சிதறல் ஏற்படலாம்.
👉 பார்வை குறைபாடு 👉தூக்கமின்மை 👉கவனச்சிதறல் 👉அறிவாற்றல் குறைபாடு 👉நடத்தையில் மாற்றம் 👉பேச்சு திறன் குறைபாடு 👉குழப்பம் 👉மனநல பிரச்சனை 👉உடல் பருமன் 👉உடல் செயல்பாடு குறைவு 👉மந்த நிலை 👉மோசமான எலும்பு ஆரோக்கியம்
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதால் மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை குறைத்து விட்டு வெளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்கலாம். விடுமுறை நாட்களில் பூங்கா அல்லது பீச்சுக்கு கூட்டி சென்று விளையாட வைக்கலாம். பெற்றோர்கள் சிறிது நேரம் குழந்தைகளுடன் தங்களது நேரத்தை செலவிடலாம் இப்படி செய்வதன் மூலம் குழந்தைகள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதை தவிர்க்கலாம்.