சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!!
சீனாவின் Changjiang ஆற்றில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஜப்பானிய கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.
அதில் இருந்த ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் கப்பலான YANGZE-22 வின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது.
Hengsha East இல் கப்பலின் சேத மதிப்பீட்டிற்காக நங்கூரமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கப்பல்கள் மோதியதில் YANGZE 22 இல் இருந்த சுமார் 9 டன் எண்ணெய் கசிந்ததாக தெரிகிறது.
YANGZE -22 கப்பலின் உரிமை நிறுவனம் மற்றும் ஷங்ஹாய் கடல்துறை பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெயை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.