மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்கு உதவ சென்றுள்ள சிங்கப்பூர் தற்காப்புப் படையை லீ பாராட்டினார்.
மியான்மருக்கு உடனடியாக சென்ற மீட்பு குழுக்களில் சிங்கப்பூர் குடிமை தற்காப்புக் குழுவும் ஒன்று என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த நோன்பு பெருநாளின் போது தங்களது குடும்பத்தை விட்டு மியான்மருக்கு சென்று இருக்கும் அதிகாரிகளின் சேவை மற்றும் அவர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கு நீங்கள் பெருமை சேர்க்கிறீர்கள் என்றும் உங்களை எண்ணி நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.