காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!!

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!!

காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ்(Malaysia Airlines) MH370 என்ற விமானத்தை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் Anthony Loke விமானத்தை தேடும் பணிகளுக்கு இது உகந்த காலம் இல்லை என்று தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.

2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி MH370 என்ற விமானம் காணாமல் போனதாகவும் அதில் 239 பேர் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

விமானத்துறை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தேடல் நடவடிக்கைகளுக்குப் பிறகும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.