Dubai; சொந்த தாய் நாட்டில் போதுமான அளவு வருமானம் கிடைக்காததால் வெளிநாடுகளை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர் செல்லும் இளைஞர்கள் நேரம், காலம், குடும்பம் என அனைத்தையும் மறந்து இரவு பகலாக உழைப்பதால் தான் ஒரு வருடம் என்பது அவர்களுக்கு கடகடவென்று உருண்டோடி விடுகின்றது.
இவ்வாறு நாட்கள், வருடங்கள் பார்க்காமல் உழைக்கும் இளைஞர்கள் இன்னும் இரண்டு வருடம் வெளிநாட்டில் இருந்து விட்டு வரலாம் என நினைக்க நினைக்க வருடங்கள் அதிகமாய் கொண்டு தான் இருக்கின்றது. அப்படி என்றால், எவ்வளவு வயது வரை தான் வெளிநாட்டில் வேலை செய்ய முடியும் என்ற கேள்விக்கான விளக்கம் தான் இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
நம் ஊர்களில் பெரும்பாலானோர் துபாயில் வேலை செய்து வருகின்றனர் இந்நிலையில் வேலைவாய்ப்புக்கான ரிட்டயர்மென்ட் காலம் பற்றி ஐக்கிய அரபு எமிரேட் சட்டம் சொல்வது என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி ஒரு வெளிநாட்டு ஊழியர் எமிரேட்டில் 60 வயது வரை தங்கி வேலை பார்க்கலாம்.
ஒரு தொழிலாளர் 60 வயதிற்கு மேலே வேலை செய்யும் பொழுது அவர்களின் பாசிற்கான ஒப்புதல் வழங்கப்படாது. இதற்கு மாறாக, சம்பந்தப்பட்ட பணியாளர் குறிப்பிடத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தால் அவர்களை 65 வரை வேலை செய்ய அனுமதி அளிக்கின்றது.
இதற்காக சம்பந்தப்பட்ட பணியாளர்களிடம் அனுமதி பெற்று ஊதிய வயதை 65 வயது வரை உயர்த்த வேண்டும் என மனிதவள் அமைச்சகம் கூறுகின்றது. எனவே, ஒரு முதலாளி இந்த தொழிலாளி தான் வேண்டுமென்று மனிதவள அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் 60 வயதிற்கு மேலேயும் எமிரேட்டில் பணியாற்றலாம் என சட்டம் சொல்கின்றது. ஆனால் அதற்குள் நமது வயது எல்லாம் ஓடிப் போகும் இனி சம்பாதிக்க என்ன இருக்கின்றது என சலிப்பு வந்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.