விண்வெளியில் இருந்து கீழே விழுந்த உலோகப் பொருள் குறித்த ஆராய்ச்சி..!!!

விண்வெளியில் இருந்து கீழே விழுந்த உலோகப் பொருள் குறித்த ஆராய்ச்சி..!!!

கென்யாவில் விண்வெளிக் குப்பைகள் பூமியில் விழுவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

வானத்திலிருந்து தரையில் விழுந்த உலோகப் பொருள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கென்யாவில் முக்குகு கிராமம் என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) ஒரு பெரிய உலோகப் பொருள் பூமியில் விழுந்தது.

இது ஒரு உந்துகணை ஏவும் வாகனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

உலோகப் பொருள் சுமார் 450 கிலோகிராம் எடை கொண்டதாக இருந்தது.

அதன் விட்டம் சுமார் இரண்டரை மீட்டராக இருந்தது.

உலோகப் பொருள் விழுந்ததாக கருதப்படும் இடத்தில் கென்யா விண்வெளி நிறுவனம் ஆய்வு நடத்தியது.

உலோகம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய தேவையான பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

உலோகம் விழுந்ததில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் பாதுகாப்பு குறித்த அச்சமும் இல்லை என்று கூறப்படுகிறது.

விண்வெளி ஆய்வுகள் உலகளவில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூமியின் சுற்றுப்பாதையில் மனிதர்கள் உருவாக்கிய பொருட்கள் விழுவது குறித்து கவலை ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து விழும் இதுபோன்ற பொருள்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து உலக நாடுகள் தற்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==