பட்ஜெட் விலையில் அறிமுகம் கண்டுள்ள ரியல்மி 8 5g!!

பட்ஜெட் விலையில் அறிமுகம் கண்டுள்ள ரியல்மி 8 5g!!

realme நிறுவனம் சியோமி,விவோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

Realme நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட் போன்கள் தனித்துவமான சிறப்பு அம்சங்களுடன் குறைந்த விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட realme 8 5g ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இனி வரும் நாட்களில் 5g சாதனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் அதை கவனத்தில் வைத்து தொடர்ந்து realme நிறுவனம் 5g சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது.

மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

realme நிறுவனம் சமீபத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட realme 8 5g ஸ்மார்ட் போனை ரூபாய் 13,999 அறிமுகம் செய்துள்ளது.

அதேபோல 4gb ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5ஜி சாதனத்தின் விலை 14,999 ரூபாய் ஆக உள்ளது.

அதற்கு பின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்டின் விலை 16,999 ரூபாயாக உள்ளது.

இந்த realme 8 5g சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி தெளிவாக காண்போம்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் :

ரியல்மி நிறுவனம் அதன் சாதனத்தின் டிஸ்ப்ளே வடிவமைப்பில் அதிக அளவு கவனம் செலுத்தியுள்ளது .

அதன் படி realme 8 5g ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் hd பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது.


90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 600 nits பிரைட்னெஸ் உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

குறிப்பாக realme 8 5g ஸ்மார்ட் போன் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

மீடியாடெக் dimensity 700 5g சிப்செட் :

அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் இதயம் போன்றது சிப்செட் ஆகும். அதன்படி இந்த ரியல்மி 8 5g ஸ்மார்ட்போனின் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் dimensity 700 5g சிப்செட்டுடன் ஏஆர் ம் மாலி-ஜி 52 எம்சி 2 ஜிபியூ வசதியும் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சாதனம் நீண்ட வருடங்கள் தாங்கும்படி இந்த சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த அட்டகாசமான ரியல்மி 8 5g ஸ்மார்ட் போன் மாடலாகும்.

48எம்பி பிரைமரி சென்சார் :

கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் உள்ள அதே கேமரா மாதிரியான அம்சங்களைக் கொண்டுள்ளது realme 8 5g ஸ்மார்ட்போன்.

realme 8 5g ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார்,2 எம்பி மோனோகிரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.

மேலும் இந்த சாதனத்தில் கேமராக்கள் உதவியுடன் இரவு நேரங்களில் கூட மிகவும் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம்.

5000mah பேட்டரி :

இந்த புதிய சாதனம் சரியான பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது.

அதன்படி ரியல்மி 8 5g ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் 18 வாட் குவிக் சார்ஜ் உதவியுடன் வெளிவந்துள்ளது.

மேலும் இதில் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த ரியல் மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

சூப்பர்சோனிக் பிளாக் மற்றும் சூப்பர்சோனிக் ப்ளூ போன்ற வண்ணங்களில் இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது.