கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! 28/12/2024 / #sgnewsinfo, #Singapore, #Singaporenews, #worldnews கடந்த ஆண்டு பதிவான கொள்கலன் எண்ணிக்கையை இவ்வாண்டு முறியடித்த PSA!! சிங்கப்பூர் : இந்த ஆண்டு 40 மில்லியனுக்கும் அதிகமான கண்டெய்னர்களைச் சிங்கப்பூரின் PSA துறைமுக நிர்வாக அமைப்பு கையாண்டுள்ளதாக தெரிவித்தது.அது இருபது அடி அளவுடைய TEU கண்டெய்னர்களின் எண்ணிக்கை.இந்த எண்ணிக்கை இந்த மாதம் (டிசம்பர்) 24 ஆம் தேதி வரை பதிவானது.கடந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையை ஆணையம் முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு 38.8 மில்லியனாக பதிவாகியிருந்தது.உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் சீனாவின் ஷாங்காய் துறைமுகம். சிங்கப்பூர் : அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை!! சிக்கிய 189 பேர்!! கடந்த ஆண்டு ஷாங்காய் துறைமுகம் 49 மில்லியன் TEU கண்டெய்னர்களை கையாண்டது.TEU என்பது கண்டெய்னர் கப்பல்கள்,டெர்மினல்கள் மூலம் எவ்வளவு சரக்குகளைக் கையாள முடியும் என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை.இந்த மைல்கல் தொடர் வளர்ச்சி,சிறந்த செயல்பாடுகளை எடுத்துக்காட்டுவதாக அது கூறியது.உலகின் மிகப்பெரிய கொள்கலன் துறைமுகம் பட்டியலில் சிங்கப்பூரின் PSA இரண்டாவது இடத்தில் இருந்தது. நார்வேயில் ஒளிக்காட்சியைக் காண சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!! சாலையை விட்டு விலகியதால் விபரீதம்!!