அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்…!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள்...!!!

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்பின் சில கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் வாஷிங்டன் மற்றும் பிற நகரங்களில் பேரணி நடத்தினர்.

அமெரிக்காவில் ஜனவரி மாதம் ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்றதிலிருந்து சுமார் 200,000 கூட்டாட்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தல், அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், காஸா மற்றும் உக்ரேன் போர் போன்ற பிரச்சனைகள் தொடர்பாக குரல் எழுப்பினர்.

டிரம்பின் நிர்வாகம் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களை கைது செய்துள்ளதுடன், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய திட்டங்கள்,பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு மத்திய நிதியுதவியை நிறுத்துவதாக அச்சுறுத்தியுள்ளது.

இதனால் வாஷிங்டன்,நியூயார்க் நகரம் மற்றும் சிகாகோ உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.