தினசரி உணவில் புரோட்டின் இருப்பது அவசியம்...!! எச்சரிக்கும் மருத்துவர்கள்...!!!

நம் உடலுக்கு புரதம் இன்றியமையாதது. எனவே தினசரி நாம் உண்ணும் உணவில் புரதச்சத்தை சேர்த்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.
சைவமோ அசைவமோ எந்த உணவாக இருந்தாலும் அது புரதச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நமது உடல் நன்றாகச் செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களில் புரதமும் ஒன்று. சிறுவயதிலேயே போதுமான அளவு புரதத்தை உட்கொள்வதால் வயது தொடர்பான உடல் வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் வயது தொடர்பான வலி வராமல் தவிர்க்கலாம்.சிறு வயது முதலே புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் வயதாகும் பொழுது ஆரோக்கியமுடன் இருக்கலாம்.எனவே புரதம் நிறைந்த சில உணவுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
அசைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை, சிக்கன், மீன், ஆட்டிறைச்சி ஆகியவை புரதச் சத்து நிறைந்தவை.
சைவ உணவு உண்பவர்களுக்கு, பருப்பு வகைகள், முழு தானியங்கள், பாதாம் மற்றும் பருப்புகள் போன்றவை நல்ல புரதச்சத்துக்களை தரக்கூடியவை.
எனவே நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் புரதச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
மூன்று வேலை உண்ணும் உணவுகளில் கூட புரதச்சத்து உள்ள உணவை சேர்த்துக் கொள்ளலாம். சிலருக்கு கோழிக்கறி சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் பருமனும், பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.ஆனால் வாரம் ஒருமுறை வெறும் 4 துண்டுகளை சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
FOLLOW US ON MORE ⏬:
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==