தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!!

தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!!

தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

கடந்த வாரம் நான்கு இணையத்தளச் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு பயணத்தின் நேரம் மற்றும் தூரத்தின் அடிப்படையில் கட்டணத்தை 50 காசு வரை உயர்த்துவதாக அறிவித்தன.

புதிய சட்டத்தினால் செலவுகள் அதிகரிக்கும் என்று இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்தன.

ஊழியர்களுக்கான Platform Workers இணையச் சேவை மசோதா ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும்.அவர்களுக்கு கிடைக்கும் சில நன்மைகள் இணையச் சேவை ஊழியர்களுக்கு வேலையின் போது ஏற்படும் காயங்களுக்கான நிதி இழப்பீடு மற்றும் மத்திய சேமநிதி சந்தா ஆகியவை அடங்கும்.

சேவைகளின் கட்டணம் அதிகரித்தாலும் பெரும்பாலான பயனாளர்கள் இந்த சேவைகளை பயன்படுத்துவதை நிறுத்த விரும்பவில்லை என்று கூறினர்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==