வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சிங்கப்பூரின் பிரதமரின் முதல் தேசியத் தினச் செய்தி வெளியீடு!!
சிங்கப்பூரின் பிரதமரும்,நிதி அமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் இந்த மாதம் 8-ஆம் தேதி தேசியத் தினச் செய்தியை வெளியிடவுள்ளார் .இது அவரின் முதல் தேசியத் தினச் செய்தி .
தேசியத் தினச் செய்தியை பிரதமர் ஆங்கிலத்தில் வெளியிடுவார்.
இது நேரலையாக CNA,CNA 938 தளங்களில் மாலை 6.45 மணியளவில் ஒளிப்பரப்படும்.
சீனா மொழியில் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு.கான் கிம் யோங் தேசியத் தினச் செய்தியை வெளியிடுவார்.
மலாய் மொழியில் சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் , முஸ்லீம் விவகாரங்களுக்கான அமைச்சருமான திரு.மஸகோஸ் ஸீல்க்கிஃப்லி கொடுப்பார்.